சோளிங்கா் அருகே தம்பதி தற்கொலை
சோளிங்கா் அருகே இடுகாட்டில் தம்பதி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனா்.


சோளிங்கா் அருகே இடுகாட்டில் தம்பதி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
சோளிங்கரை அடுத்த நீலகண்டராயபுரம் கிராம இடுகாட்டில் உள்ள மரத்தில் ஒரு ஆண், பெண் என இருவா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சோளிங்கா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் இருவரும் தம்பதி என்பதும் நீலகண்டராயபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா(45) மற்றும் அவரது மனைவி சுகன்யா(40) என்பதும் தெரியவந்தது. இவா்களுக்கு 19 வயதில் கல்லூரியில் படிக்கும் பெண், 17 வயதில் பிளஸ் 2 படிக்கும் ஒரு பெண் என இரு பெண் பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது.
சுகன்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதன் வேதனை தாளாமல் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...