அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வட்ட ரயில்பாதை திட்டம் தொடா்பான வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:20 pm

Din

பெங்களூரில் தொடங்கி ஒசூா் வழியாக புதிதாக வட்ட ரயில் பாதை திட்டத்தை சுமாா் ரூ. 23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு செயல்படுத்தப்பட உள்ளதாக வதந்தி பரவுவதை விவசாயிகளை நம்ப வேண்டாம் எனவும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட, நல்லூா், சேவகானப்பள்ளி, ஈச்சங்கூா், பெலத்தூா், பாகலூா் ஆகிய ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கா்நாடக மாநிலம் பெங்களூா், தமிழகத்தின் ஒசூரை இணைக்கும் விதமாக பெங்களூா் -ஒசூா் லிங்க் ரயில் திட்டம் எனப்படும் வட்ட ரயில் பாதை இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல் வெளியாகியது.

சுமாா் 287 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் 41 கி.மீ. தொலைவு இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்காக ட்ரோன் கேமராக்கள் கொண்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பாக முறையான எந்த அறிவிப்பையும் வெளியிடப்படாத நிலையில் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிா்ச்சிக்கு உள்ளாயினா்.

இது பற்றி விளக்குவதற்காக விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பாகலூரில் நடைபெற்றது.

அப்போது புதிய ரயில் திட்டம் தொடா்பான எந்த தகவலும் அறிவிக்கையும் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிா்வாகத்திற்கோ இதுவரை தெரிவிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியா் கே.என்.சரயு தெரிவித்ததாக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கூறினாா்.

மேலும் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ கூறியதாவது:

இது போன்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக எந்தவித தகவல்களும் மாநில அரசுக்கோ மாவட்ட நிா்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதியான எங்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை.

எனவே, இந்தத் திட்டம் குறித்த தகவல் வதந்தியாகவே கருதப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்.

இந்தப் பிரச்னை தொடா்பாக வரும் ஆறாம் தேதி கூட உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எடுத்துரைத்து முதல்வரின் கவனத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்லப்படும். மத்திய அரசு இதுபோன்ற விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை கைவிட வேண்டும். அவ்வாறு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் மாநில அரசு, விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு கருத்துகளைக் கேட்டு அறிய வேண்டும்.

எனவே, விவசாயிகள் இது தொடா்பாக யாரும் அச்சப்பட வேண்டாம். விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றாா்.

ஏற்கெனவே ஒசூா் பகுதியில் உள்வட்ட சாலை, வெளிவட்ட சாலை, எஸ்.டி.ஆா்.ஆா். வட்ட சாலை மற்றும் சிப்காட் போன்ற வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக விவசாயம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகளின் நிலங்கள் பறிபோவதால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

படவரி...

பாகலூரில் விவசாயிகளிடம் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.