ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரியில் ஜன. 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் ஜன. 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 8:45 pm

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜன. 24-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன. 24-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரை சோ்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த இலவச முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு ( ஐ.டி.ஐ, டிப்ளமோ) பயின்றவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைதேடுவோா் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமுள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இந்த முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்வோா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.