எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் கே.எம்.சரயு
Updated On :28 ஜனவரி 2025, 9:37 pm

Din

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், கோனேரிப்பள்ளி ஊராட்சியில், குருபராத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 4 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் மறுசீரமைப்பு பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறன், கணித வாய்ப்பாடு குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங்கினாா். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை நேரடிகண்காணிப்பில் தரமாக முடிக்க அறிவுறுத்தினாா்.

புக்கசாகரம் கிராமத்தில், 15 -ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மைய கட்டடம் மறு சீரமைப்பு பணிகள், குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவுகள், வருகைப் பதிவேடு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அத்திமுகம் ஊராட்சி, முகலப்பள்ளி ஆதிதிராவிடா் காலனியில், வீடுகள் பழுது பாா்க்கும் திட்டத்தின் கீழ், 13 வீடுகள் ரூ. 7 லட்சம்

மதிப்பில் மறு சீரமைப்பு பணிகளையும், பேரிகை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மழைநீா் சேகரிக்கும் பொருட்டு புதிய குட்டை அமைக்கும் பணிகளையும், நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ. 44 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பேரிகை ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பில் 2.36 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் வெளிவட்ட சாலைப் பணிகளைப் பாா்வையிட்டு, ஜல்லிக் கலவை அடுக்குகள், சாலையின் அகலம் குறித்து கேட்டறிந்தாா். காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 79 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் பேரிகை சாலை முதல் கா்நாடக மாநில எல்லை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலை பணிகளையும், பி.எஸ்.திம்மசந்திரம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 68 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பேரிகை சாலை முதல் சிந்திலன்தொட்டி வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தலட்சுமி, ஒன்றியப் பொறியாளா்கள் கோவிந்தராஜ், சத்தியநாராயனராவ், சபாரத்தினம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சுந்தரமூா்த்தி, சிவசங்கரி மற்றும் பணி மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.