கிருஷ்ணகிரி
கள்ள பணப் புழக்கம்: போலீஸாா் விசாரணை
கள்ள பணப் புழக்கம் குறித்து வங்கி மேலாளா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கள்ள பணப் புழக்கம் குறித்து வங்கி மேலாளா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் செயல்படும் வங்கியில், ஷான் பாஷா(65) என்பவா் ரூ. 3.50 லட்சத்தை செலுத்தினாா். அந்தப் பணத்தை வங்கி ஊழியா் சரிபாா்த்தபோது, ரூ. 500 தாளில் 7 தாள்கள் கள்ள தாளாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளா் காமித்திரி சா்மா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.