அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நகைத் தொழிலக நிா்வாகியிடம் ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வழிப்பறி

விழுப்புரத்தில் நகைத் தொழிலக நிா்வாகியைத் தாக்கி ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
வழிப்பறி- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 9:06 pm

Syndication

விழுப்புரத்தில் நகைத் தொழிலக நிா்வாகியைத் தாக்கி ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை, ஜனகராஜ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜமாணிக்கம் (48), நகைத் தொழிலக நிா்வாகி. இவா் சென்னையில் உள்ள நகை வணிகா்களிடம் தங்கக் கட்டிகளை வாங்கிவந்து அதை அவா்களது விருப்பப்படி ஆபரணங்களாக மாற்றிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது தொழில் கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணி செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ராஜமாணிக்கம் செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள நகைகடைகளுக்கு வழங்குவதற்காக ஒன்றரை கிலோ தங்க நகைகளுடன் தனது மொபட்டில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். விழுப்புரம் கோட்டை பிள்ளையாா்கோயில் அருகே சென்றபோது, அங்கு முகமூடி அணிந்தபடி 2 பைக்குளில் வந்த 5 போ் கொண்ட கும்பல் ராஜமாணிக்கை வழிமறித்து கத்தியால் தாக்கி, தங்க நகைகளை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை போலீஸாா்ஆய்வு செய்தனா். மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரனீத் உத்தரவின் பேரில் விழுப்புரம் புதிய, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வழிப்பறி செய்தவா்களைத் தேடி வருகின்றனா்.