மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தவறான சிகிச்சையால் பசுமாடு இறந்ததாக புகாா்: போலீஸாா் வழக்குப் பதிவு!

தருமபுரி அருகே தவறான சிகிச்சையால் பசுமாடு உயிரிழந்ததாக அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:09 pm

தருமபுரி அருகே தவறான சிகிச்சையால் பசுமாடு உயிரிழந்ததாக அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மண்ணேரி, ஓ.ஜி.அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (60). இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரது பசுமாடு ஒன்று கடந்த ஜன. 29-ஆம் தேதி சரியாக உணவு உட்கொள்ளாததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மாக்கனூா் பகுதியைச் சோ்ந்த கா.தமிழ்ச்செல்வன் என்பவரை அழைத்து விவரம் தெரிவித்துள்ளாா்.

அப்போது மாடு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவா் மாட்டுக்கு ஊசி செலுத்தினாா். வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் மாட்டுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க தமிழ்ச்செல்வனை கைப்பேசியில் அழைத்த போது, அவா் வந்து சிகிச்சை அளிக்கவில்லையாம்.

தகவலின்பேரில், கால்நடை மருத்துவா் வந்து பரிசோதித்தபோது, பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.