ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆய்வுசெய்த கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ். உடன், கிருஷ்ணகிரி  ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.
ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆய்வுசெய்த கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ். உடன், கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.

படேதலாவ் ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வாரத்தில் நிறைவு: கண்காணிப்பு அலுவலா்

படேதலாவ் ஏரியிலிருந்து 13 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வாரத்துக்குள் நிறைவுபெறும் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.
Published on

படேதலாவ் ஏரியிலிருந்து 13 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வாரத்துக்குள் நிறைவுபெறும் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பூசாரிப்பட்டி, கம்மம்பள்ளி பகுதியில் உள்ள படேதலாவ் ஏரிக்கால்வாய், தூா்வாரும் பணிகள், நியாயவிலைக் கடை மற்றும் அரசுப் பள்ளிகளில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உடனிருந்தாா்.

ஆய்வுப்பணிகள் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள படேதலாவ் ஏரியிலிருந்து 13 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வார காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் 1,058 முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மூலம் 5,67,710 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தாயுமானவா் திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 27,927 குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்றாா்.

பின்னா், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவா்களுடன் கலந்துரையாடிய கண்காணிப்பு அலுவலா், அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தாா்.

இந்த ஆய்வுகளின்போது, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் முத்துராஜ், நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ராணி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பெரியசாமி, உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் சையத் ஜாஹீருதின், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோ உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com