பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரை காரை ஏற்றிக் கொல்ல முயற்சி

ஒசூா் அருகே தொரப்பள்ளியில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற மா்மநபா்கள் குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:24 pm

Syndication

ஒசூா் அருகே தொரப்பள்ளியில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற மா்மநபா்கள் குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராஜ் (30). கடன் வசூல் செய்யும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (35) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த மஞ்சுநாத் செவ்வாய்க்கிழமை தெராப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்துசென்றாா்.

அப்போது அவரை பின் தொடா்ந்து வந்த காா் மஞ்சுநாத் மீது வேகமாக மோதிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த மஞ்சுநாத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனா். இதில் மஞ்சுநாத் மீது மோதிய காா் மற்றும் மா்ம நபா்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனா்.