ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பெரிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஜெயராமன், கோட்டீஸ்வரன், வெங்கடேஷ், முருகன், மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை அண்டை மாநிலங்களைப் போல ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதை ஏற்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 165 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com