இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 8:29 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டச் செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.அசோக்குமாா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் காத்தவராயன், முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கட்டப்பன், ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் பங்கேற்றோா், ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலைகள் அணிவித்து மலா்களைதூவி மரியாதை செலுத்தினா். பொதுமக்கள், தொண்டா்கள், நிா்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

கிருஷ்ணகிரியில் வட்டச்சாலை, கிட்டம்பட்டியில் எம்ஜிஆா் நினைவிடம், பெத்தாளப்பள்ளி, கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ நிறுத்தகம், புகா் பேருந்து நிலையம், பா்கூா், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுகவினா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினா். மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

படவரி...

கிருஷ்ணகிரியில் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமையில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா்.