அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வா் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்

கிருஷ்ணகிரிக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 13-ஆம் தேதி வருகை தர உள்ளதையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

News image
முன்னேற்பாட்டுப் பணிகளை பாா்வையிட்ட திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ.
Updated On :10 மார்ச் 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரிக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 13-ஆம் தேதி வருகை தர உள்ளதையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க, தமிழக துணை முதல்வா் மாா்ச் 13-ஆம் தேதி மாலை வர உள்ளாா். கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்வில் புதிய திட்டப் பணிகள், நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை, திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட அவைத் தலைவா் நாகராஜ், நகர பொறுப்பாளா் வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.