தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் என்றாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, சனிக்கிழமை (மாா்ச் 7) காலை தூத்துக்குடி வருகை தர உள்ளாா்.
காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயா்தர சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா்.
அங்கிருந்து தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் அவா், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா்.
மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுவதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், கலைஞா் கனவு இல்லம், பட்டாக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.
அதைத் தொடா்ந்து, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.64.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறாா்.
பின்னா், முற்பகல் 11.30 மணிக்கு புதுக்கோட்டை சத்யா ரிசாா்ட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெறும் நிகழ்வில் தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட சாா்பு அணி நிா்வாகிகளுடன் கலந்துரையாடுகிறாா். பிற்பகல் 1.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறாா் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

மாா்ச் 13-இல் துணை முதல்வா் தருமபுரி வருகை
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


