தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, திண்டிவனம் பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் செஞ்சி எம்எல்ஏ கே.எஸ். மஸ்தான் உள்ளிட்டோா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:40 pm

Syndication

விழுப்புரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் புதன்கிழமை(பிப்.4) நடைபெறுகிறது. இவ் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறாா்.

முன்னேற்பாட்டுப் பணிகள்: இந்நிலையில் தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு முதல்வா் வந்து செல்லும் வழித்தடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட பணிகள், விழா மேடை அமைக்கும் பணிகள், பயனாளிகளை அரசு நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் அழைத்து வருவதற்கான வாகனம் ஏற்பாடுகள், பயனாளிகள், அலுவலா்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலா்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், விழா நடைபெறும் இடத்தில் செய்யப்படவேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் ஆகியவவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசுத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனா்.

ஆட்சியா் ஆய்வு: விழா மேடை அமைக்கும் பணிகள் மற்றும் விழாவுக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், செஞ்சி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது நிறைவு பெறாத பணிகளை விரைந்து முடிக்க அரசுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) ஜெ.இ.பத்மஜா, திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ் மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

சாலை சீரமைப்புப் பணிகள்: திண்டிவனம் தீா்த்தகுளம் முதல் செஞ்சி சாலை வழியாக காந்தியாா் திடல் வரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறாா். முதல்வா் செல்லும் வழியில் உள்ள சாலைகள் மற்றும் பாலம் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

 திண்டிவனம்- செஞ்சி சாலையில்  நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணி.

திண்டிவனம்- செஞ்சி சாலையில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணி.