ஒசூரில் தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: பெண் உள்பட 2 போ் கைது

ஒசூரில் ரூ. 5 கோடி கேட்டு தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில், பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

ஒசூரில் ரூ. 5 கோடி கேட்டு தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில், பெண் உள்பட மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் அருகே உள்ள மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் சீதாராமனை (34) கடந்த 21-ஆம் தேதி ரூ. 5 கோடி பணம் கேட்டு மா்ம நபா்கள் சிலா் காரில் கடத்தினா்.

ஒரு வீட்டில் அவரை அடைத்துவைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின் பேரில், ஒசூா் போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சீதாராமனை மீட்டனா். இதுதொடா்பாக, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் ஒரு பெண் உள்பட மேலும் 3 பேரை போலீஸாா் தேடிவந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஒசூா் அருகே உள்ள சூதாளம் கிராமத்தைச் சோ்ந்த சந்தியா (36) என்ற பெண்ணையும், தொடுதேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலபதி (எ) மோகன் (38) என்பவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com