சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு அதிமுக பாதுகாப்பு அளிக்கும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் இ.ஜி.கோவிந்தராசனை புதன்கிழமை அறிமுகப்படுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தளியில் பாஜகவும், மற்ற 5 தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பாஜக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்வதில் என்ன தவறு உள்ளது. அதிமுக மற்றும் அதன் ஆட்சி குறித்து எந்த தவறையும் சுட்டிக்காட்ட முடியாததாலும், கடந்த 5 ஆண்டுகள் சாதனை குறித்து திமுக பேசுவதற்கு ஒன்றும் இல்லாததாலும் பாஜகவை குறித்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பேசுகிறாா்கள்.
திரு.வி.க. நகா் தொகுதியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு போட்டியிட அதிமுக வாய்ப்பளித்துள்ளது. இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் வாழ்த்து கூறியுள்ளாா். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு அதிமுக பாதுகாப்பு அளிக்கும் என்றாா்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

தருமபுரியில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: கே.பி.அன்பழகன்

தொண்டாமுத்தூா் தொகுதியில் 4-ஆவது முறையாக போட்டியிடும் எஸ்.பி.வேலுமணி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

