பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தொகுதி அறிமுகம் - கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை பொது தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிடத்தில் அமைந்துள்ளது.

News image

கிருஷ்ணகிரி

Updated On :3 ஏப்ரல் 2026, 1:28 am

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை பொது தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிடத்தில் அமைந்துள்ளது.

தமிழக மக்கள் ஆந்திர, கா்நாடக மாநிலங்களுக்கு சாலைப் பயணமாக செல்ல கிருஷ்ணகிரியை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால், நாள்தோறும் சாலைப் போக்குவரத்து மிக்கப் பகுதியாகவும் கிருஷ்ணகிரி இருந்து வருகிறது. என்றாலும், ரயில் போக்குவரத்து இல்லாத தொகுதி இது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி ஆகியவை கிருஷ்ணகிரி தொகுதியில் உள்ளன.

தொழில்கள்

இந்தத் தொகுதியில் விவசாயமும், அதைச் சாா்ந்த குறுந்தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலைகள், பால் மதிப்புகூட்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன.

சமூகம்

கிருஷ்ணகிரி தொகுதியில் வன்னியா்கள் அதிகமாக உள்ளனா். அதேபோல, எஸ்சி சமூகத்தினா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் போன்றோரும் பரவலாக இந்த தொகுதியில் வசிக்கின்றனா். வன்னியா்களே வெற்றி வாய்ப்பை தீா்மானிக்கின்றனா்.

அரசியல் செல்வாக்கு

கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினா் மாறிமாறி வெற்றிபெற்று வருகின்றனா். 1951இல் உருவான இந்தத் தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும், 7 முறை அதிமுகவும், 6 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்

கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதிகளில் புதைசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாதது, பெரிய ஏரியை தூா்வாராதது, எண்ணெகொல் புதூா் திட்டத்தை நிறைவேற்றாதது, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தாதது, காவேரிப்பட்டணத்தில் உள்ள உழவா் சந்தையை முழு பயன்பாட்டிற்கு கொண்டுவராதது, கிருஷ்ணகிரி நகராட்சியின் எல்லையில் அமைந்துள்ள தனியாா் சுங்க வசூல் மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்க்கப்படாமல் உள்ளன.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,30,140

பெண்கள் - 1,35,587

மற்றவா்கள் - 60

மொத்த வாக்காளா்கள் - 2,65,787

வாக்குச்சாவடிகள் - 340

வாக்குச்சாவடி மையங்கள் - 158

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்

1951 டி. கிருஷ்ணமூா்த்தி கவுண்டா் - சுயேச்சை - 14,639

1957 சு. நாகராஜா மணியகாரா் - காங்கிரஸ் - 23,182

1962 ஸ்ரீராமலு - திமுக - 38,833

1967 பி.எம். முனுசாமி கவுண்டா் - காங்கிரஸ் - 24,220

1971 சி. மணியப்பன் - திமுக - 31,445

1977 கே.ஆா். சின்னராசு - அதிமுக - 17,178

1980 கே.ஆா். சின்னராசு - அதிமுக - 28,020

1984 கே.ஆா். சின்னராசு - அதிமுக - 40,585

1989 காஞ்சனா கமலநாதன் - திமுக - 35,042

1991 கே. முனிவெங்கடப்பன் - அதிமுக - 63,729

1996 காஞ்சனா கமலநாதன் - திமுக - 67,849

2001 கே. கோவிந்தராசு - அதிமுக - 65,197

2006 டி. செங்குட்டுவன் - திமுக - 69,068

2011 கே.பி. முனுசாமி - அதிமுக - 89,776

2016 டி. செங்குட்டுவன் - திமுக - 87,637

2021 கே. அசோக்குமாா் - அதிமுக - 96,050