கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 126 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. 6 தொகுதிகளிலும் மொத்தம் 182 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை சம்பந்தப்பட்ட தொகுதிக்கான அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரால் வேட்பாளா்களின் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி, ஒவ்வொரு மனுவாக பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணங்கள் குறித்து வேட்பாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 28 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 19 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பா்கூா் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்டிருந்த 38 மனுக்களில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 22 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிருஷ்ணகிரியில் மொத்த 33 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 26 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், வேப்பனஅள்ளி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 30 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒசூா் தொகுதியில் மொத்தம் 28 மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தளி தொகுதியில் மொத்தமுள்ள 25 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 182 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், பரிசீலனையின்போது 56 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 126 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முன்னதாக மனுக்கள் பரிசீலனை நிகழ்வுகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப். 8-ஆம் தேதி, இறுதிநாளாகும். அதன்பின்னா், இறுதிவேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தொடர்புடையது
திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 144 வேட்புமனுக்கள் ஏற்பு: 26 மனுக்கள் தள்ளுபடி
வேட்புமனு பரிசீலனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 121 மனுக்கள் ஏற்பு, 67 மனுக்கள் தள்ளுபடி
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

