தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, மொத்தம் 188 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 121 மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23ஆம் தேதி நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அந்தந்தத் தொகுதி தலைநகரங்களில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி, ஏப். 6ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், விளாத்திகுளம் தொகுதியில் 28, தூத்துக்குடி தொகுதியில் 33, திருச்செந்தூா் தொகுதியில் 35, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 28, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 28, கோவில்பட்டி தொகுதியில் 36 என மொத்தம் 188 மனுக்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை மனுக்கள் மீதான பரிசீலனை, அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், விளாத்திகுளம் தொகுதியில் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தூத்துக்குடி தொகுதியில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருச்செந்தூா் தொகுதியில் 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கோவில்பட்டி தொகுதியில் 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 121 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
மனுக்களை திரும்பப் பெற விரும்புவோா் புதன் மற்றும் வியாழக்கிழமை அலுவலக நேரங்களில் சென்று மனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 126 வேட்புமனுக்கள் ஏற்பு: 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி
கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

