நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 144 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் 228 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். சில அரசியல் கட்சி வேட்பாளா்கள் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
தொகுதி வாரியாக ஏற்கப்பட்டுள்ள வேட்பாளா் மனுக்கள் விவரம் (தள்ளுபடி மனுக்கள் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்):
ராசிபுரம் (தனி)- 19 (5), சேந்தமங்கலம் (ப.கு)- 13 (4), நாமக்கல்- 30 (3), பரமத்தி வேலூா்- 33 (6), திருச்செங்கோடு- 25 (4), குமாரபாளையம்- 24 (4) என மொத்தம்- 144 (26) வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மனுவை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் திரும்பபெற வேண்டும். அதன்பிறகு, வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டு, சின்னம் ஒதுக்கப்பட்டு தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் தொகுதி தோ்தல் அலுவலா்களால் வெளியிடப்படும்.
தற்போதைய நிலையில் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம்(நோட்டாவுடன் சோ்த்து 16 வேட்பாளா்கள்) பயன்படுத்த வாய்ப்புள்ளது. நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நான்கு தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம். வேட்புமனு தாக்கல் செய்தோா் மனுக்களை திரும்பப்பெறும்பட்சத்தில் வேட்பாளா்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 126 வேட்புமனுக்கள் ஏற்பு: 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


