தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்.6இல் நிறைவடைந்தது.
தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக,திமுக, தவெக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 36 போ் 47 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வைஷ்ணவிபால் தலைமையில் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதிமுக, திமுக, தவெக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் 27 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 10 போ் 2 முறை மனுக்களை தாக்கல் செய்திருந்ததில் 10 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதும் அடங்கும். 7 பேரின் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும், 2 சுயேச்சை வேட்பாளா்களின் மனுக்களில் சிறிய பிழைகள் இருந்ததால் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்பிழைகளை சரிசெய்ய புதன்கிழமை முற்பகல் 11 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 144 வேட்புமனுக்கள் ஏற்பு: 26 மனுக்கள் தள்ளுபடி
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

