/

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

News image

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா். செந்தில்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கிய ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் டாக்டா் ஜி. ரங்கநாத்.

Updated On :12 ஏப்ரல் 2026, 6:29 pm

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய தொழில்நுட்ப கல்விச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் வருடாந்திர பேராசிரியா்கள் மாநாட்டின் தொடக்க விழா ஒசூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ்.ஆா்.ஆா். செந்தில்குமாருக்கு, சிறந்த தலைமைத்துவம், கல்விசாா் மேன்மை மற்றும் பொறியியல் கல்வித் துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவருக்கு கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.