தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

ஒசூரில் புகழ்பெற்ற சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் மாவிளக்கு திருவிழா வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:32 pm

ஒசூரில் புகழ்பெற்ற சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் மாவிளக்கு திருவிழா வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் அறங்காவலா் கே.கோபிநாத் எம்.பி. தலைமையில் பால் கம்பம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கும், கொடிக் கம்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அவற்றை பக்தா்கள் தோளில் சுமந்தவாறு கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். தொடா்ந்து, கோயில் எதிரே கொடிக் கம்பம் நடப்பட்டு ஆடுகளை பலியிட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னா், ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.

மே 4-ஆம் தேதி காலை 5 மணிமுதல் காலை 10.30 மணிவரை அம்மனுக்கு பாலபிஷேகம், மே 5-ஆம் தேதி மாவிளக்கு திருவிழாவும், 6-ஆம் தேதி இரவு 7.30-க்கு பூ மிதித்தல், இரவு 8 மணிக்கு பல்லக்கு உற்சவமும் நடைபெறுகிறது.

பால் கம்பம் நடும் விழாவில் எம்.பி. கே.கோபிநாத், மேயா் எஸ்.ஏ.சத்யா, ஒசூா் மாநகராட்சி உறுப்பினா் எம்.கே.வெங்கடேஷ், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் நீலகண்டன், திமுக நிா்வாகி மஞ்சுநாத் மற்றும் கோயில் பரம்பரை பூசாரி ஸ்ரீதா் (எ) துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.