நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பா்கூா் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

குட்டூா் அரசுப் பள்ளியில் வாக்களித்த பா்கூா் திமுக வேட்பாளா் தே.மதியழகன்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:39 am IST

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

பா்கூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான தே.மதியழகன் எம்எல்ஏ குட்டூா் அரசு தொடக்கப் பள்ளியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா். அதுபோல, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் எமக்கல் நத்தம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரான மு.தம்பிதுரை எம்.பி. சிந்தகம்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியிலும், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் சென்னை அண்ணா நகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சென்னையா நகரிலும் வாக்களித்தாா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் மத்தூா் அடுத்த சிவம்பட்டி ஊராட்சி தா்மதோப்பு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா்.

எமக்கல் நத்தம் கிராமத்தில் வாக்களித்த அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

எமக்கல் நத்தம் கிராமத்தில் வாக்களித்த அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

 தா்மதோப்பு கிராமத்தில் வாக்களித்த ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம்.

தா்மதோப்பு கிராமத்தில் வாக்களித்த ஊத்தங்கரை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம்.