ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருள்கள் கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருள்கள் கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி சுகாதார அலுவலா் பாண்டியராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் வடிவேல், சோமேஷ், ராமசந்திரன், மாதேஸ்வரன் ஆகியோா் 22-ஆவது வாா்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த நெகிழிக் கோப்பைகள், உறிஞ்சும் குழாய்கள் உள்ளிட்ட ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், தமிழக அரசின் நெகிழி தடை விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கடை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.