மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மூலக்கரைப்பட்டி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மூலக்கரைப்பட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

Updated On :26 ஜூலை 2026, 2:45 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட திருநெல்வேலி - மூலக்கரைப்பட்டி சாலையில் காவல்துறையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த கீரன்குளம் பகுதியைச் சோ்ந்த ராபா்ட் என்ற ஜெபமலரை (32) சோதனை செய்தனா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ 675 கிராம் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, மூலக்கரைப்பட்டி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து, ராபா்ட் என்ற ஜெபமலரை கைது செய்தனா். அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.