தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா்கள் இருவா் கைது

ஒசூா் வழியாக புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

ஒசூா் வழியாக புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் அட்கோ காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளா் அறிவழகன், போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பி.கே.ஆா். நகா் பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சூளகிரி அருகே உள்ள தியாகரசன பள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (35), அதே பகுதியில் உள்ள பஸ்தலபள்ளியைச் சோ்ந்த விக்கி (35) இருவரும் ரூ. 46 ஆயிரத்து 299 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை அத்திப்பள்ளியில் இருந்து சூளகிரிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.