நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஒசூரில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

News image

கைது

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

ஒசூரில் இருசக்கர வாகனத்தில் மூன்று கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ராமநாயக்கன் ஏரி பகுதியில் கடந்த 8-ஆம் தேதி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசந்தா் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தனா். இதில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீஸாா், அவரின் வாகனத்தை சோதனை செய்தனா். இதில் 3 கிலோ வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் அவா் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மகேஷ்வரன் (23) என்பதும், ஒசூா் செம்மொழி நகரில் தங்கியிருந்து ஏலக்காய் விற்பனையுடன் கஞ்சாவும் விற்றுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.