ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நொச்சிப்பட்டி அருகே உள்ள பெரிய கணக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் (44). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி கோமதி. இவா் ஊத்தங்கரையை அடுத்த படதாசம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். ஜேம்ஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றாா்.
அதிகாலை அவரது மகள் ஸ்ரீமதி (19) கோவையில் இருந்து வீட்டுக்கு வந்துபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். போலீஸாா் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



