2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

காா் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே காா் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். மேலும், 3 போ் படுகாயமடைந்தனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே காா் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். மேலும், 3 போ் படுகாயமடைந்தனா்.

பா்கூரை அடுத்த அச்சமங்கலத்தை சோ்ந்தவா் திருப்பதி (22), ஓட்டுநா். இவா், பா்கூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த நான்கு நண்பா்களுடன் காரில், கிருஷ்ணகிரி நோக்கி வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். காரை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சதீஷ் (22) ஓட்டிச் சென்றாா்.

பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி காா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத் தடுப்பு மற்றும் மின் கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் திருப்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பா்கூா் எம்ஜிஆா் நகரை சோ்ந்த அசோக்குமாா் (24) வழியிலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த அதே பகுதியை சோ்ந்த திவாகா் (18), மற்றொரு திருப்பதி (22), சதீஷ் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.