அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பாகலூரில் பணம் வைத்து சூதாட்டம்: 17 போ் கைது

Arrested

கைது

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

ஒசூா் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், காா், 15 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூா் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, முனீஸ்வரன் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிய 17 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரா (31), வசந்தகுமாா் (39), யோகானந்தம் (39), சந்திரப்பா (45), சஸ்வந்த் (40) உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பாகலூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.