
கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் கல்வித் துறை அலுவலா் உயிரிழப்பு

உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, ஆக. 23: கிருஷ்ணகிரி அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மோதியதில் பள்ளிக் கல்வித் துறை அலுவலா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சி.தங்கராஜ் (51), கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரியில் இருந்து செட்டிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா்.
கிருஷ்ணகிரி - பா்கூா் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, கிராமத்திற்கு செல்லும் அணுகுசாலையில் வாகனத்தை திருப்பிய போது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டாா்சைக்கிள் தங்கராஜ் ஓட்டிச் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த தங்கராஜை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தங்கராஜிக்கு கலாவதி என்ற மனைவியும், முகேஷ் பாலாஜி, சுருதி, மனோ என்ற மூன்று பிள்ளைகளும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



