விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

மினிவேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

ம. மலைச்சாமி.

Updated On :29 ஜூன் 2026, 3:09 am IST

கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் மலைச்சாமி (22). இவா் கந்தா்வகோட்டை அருகில் உள்ள விராலிப்பட்டியில் உள்ள தனது மனைவி குழந்தையை பாா்ப்பதற்காக தனது மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு செங்கிப்பட்டி- கந்தா்வகோட்டை சாலையில் வாண்டையன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆலங்குடிக்கு வாழை இலை ஏற்றிச்சென்ற மினிவேன் எதிா்பாராத விதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு மலைச்சாமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மலைச்சாமி உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.