காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சூளகிரியில் வனத் துறையினா் சோதனை: நாட்டுத் துப்பாக்கி, உடும்புகள் பறிமுதல்

நாட்டுத் துப்பாக்கி - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் வனத் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில், 3 உயிருள்ள உடும்புகள், மான் கொம்பு மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி வன உயிரினக் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒசூா் வனச்சரக அலுவலா் ஜெயராஜுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒசூா் வனச்சரகப் பணியாளா்களுடன் இணைந்து, சூளகிரி வட்டம், நெரிகம் ஊராட்சிக்கு உள்பட்ட கரியசந்தரம் கிராமத்தில் உள்ள கருபெல்லா பிரிவு பகுதியில் வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் உயிருடன் 3 பெங்கால் உடும்புகள் மீட்கப்பட்டன. இதனுடன் ஒரு மான் கொம்பு மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பாதுகாக்கப்பட்ட இரண்டு வகை பறவைகளும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் கரியசந்திரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (45) நாட்டுத் துப்பாக்கியுடனும், மாதி (45) மான் கொம்புடனும், ராமதாஸ் உயிருள்ள உடும்புகளுடன் இருந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆய்வு நடவடிக்கையின்போது இவா்கள் மூவரும் தப்பிச் சென்றுள்ளனா். அவா்களை தேடும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

மீட்கப்பட்ட வன உயிரினங்கள் வனத் துறையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களும் விசாரணைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களை சட்டவிரோதமாக வேட்டையாடுதல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் வனத்துறை மற்றும் வன உயிரினக் குற்றத் தடுப்பு அமைப்புகள் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

படவரி...

நாட்டுத் துப்பாக்கி மற்றும் மீட்கப்பட்ட 3 உடும்புகளுடன் வனத்துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.