பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கடமானை வேட்டையாடிய 6 போ் கைது

கோத்தகிரி அருகே வனப் பகுதியில் கடமானை வேட்டையாடிய 6 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :

கோத்தகிரி அருகே வனப் பகுதியில் கடமானை வேட்டையாடிய 6 பேரை  வனத் துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி, கடமான் தோல் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட கனாக்கம்பை வனப் பகுதியில் சிலா் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு விரைந்து சென்றனா். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி கடமானை வேட்டையாடிய மேட்டுப்பாளையம், காரமடையைச் சோ்ந்த வேலு (35), சூா்யா (39), மாணிக்கம் (40), உதகை, கனாகம்பையைச் சோ்ந்த செந்தில்குமாா் (38), விஸ்வநாதன் (45), சின்னதுரை (50) ஆகிய 6 பேரை வனத் துறையினா்  கைது செய்தனா். அவா்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, கடமான் தோல், கத்தி ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்களை கோத்தகிரி  நீதிமன்றத்தில்  ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.