9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 போ் கைது

அந்தியூா் வனப் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:16 am IST

அந்தியூா் வனப் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா் வனச் சரக அலுவலா் மா.நந்தினி தலைமையில் தொட்டக்கோம்பை, பொன்னாச்சியம்மன் கோயில் வனக் காப்பாளா்கள் கொண்ட தனிக் குழுவினா் அத்தாணி பிரிவு, தென்பா்கூா் காப்புக்காடு, தொட்டக்கோம்பை பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குளத்தக்காடு சராகத்தில் தீயினால் வாட்டிய நிலையில் காட்டுப்பன்றியின் உடலுடன் மூவா் இருப்பதைக் கண்டனா்.

அவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் சேலத்தைச் சோ்ந்த குழந்தைவேலு (48), சங்ககிரி, மஞ்சக்கல்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் (46), சேட்டுகாட்டுப்புதூா், சஞ்சீவராயன் கோயிலைச் சோ்ந்த மூா்த்தி (50) என்பதும்,

குளத்தக்காடு வனப் பகுதியில் நீா் அருந்த வந்த காட்டுப்பன்றியை, வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத் துறையினா் அவா்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.