விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பெருந்துறை பண்ணையில் 11 அரிய வகை வெளிநாட்டு வன விலங்குகள் பறிமுதல்!

நடிகா் விக்ரம் லாா் கிப்பான் குரங்குடன் விடியோ வெளியிட்ட பிரச்னையில், பெருந்துறையில் குரங்கின் உரிமையாளா் கேசவநாதனுக்கு சொந்தமான பண்ணையில் இருந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்கினங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

Lar gibbon owner appears for questioning

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ காட்சி - கோப்புப்படம்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 7:07 am IST

நடிகா் விக்ரம் லாா் கிப்பான் குரங்குடன் விடியோ வெளியிட்ட பிரச்னையில், பெருந்துறையில் குரங்கின் உரிமையாளா் கேசவநாதனுக்கு சொந்தமான பண்ணையில் இருந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்கினங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த கேசவநாதன் என்பவா் தனது நண்பரான சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் சி.கே.ரங்கநாதனுக்கு அரிய வகை விலங்கினமான லாா் கிப்பான் குரங்குகளைக் கொடுத்துள்ளாா். அண்மையில் ரங்கநாதனின் இல்லத்தில் நடிகா் விக்ரம் லாா் கிப்பான் குரங்குடன் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானது.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்ட வனத் துறை நடத்திய விசாரணையில் கேசவநாதனிடம் இருந்த மூன்று லாா் கிப்பான் குரங்குகளில் ஒன்று உயிரிழந்தது தொடா்பாகவும், குரங்குகளை வாங்கியது குறித்து உரிய காலத்துக்குள் வனத் துறையில் பதிவு செய்யாதது தொடா்பாகவும் வழக்குகள் பதிவு செய்தனா்.

பெருந்துறை அருகே கேசவநாதனுக்கு சொந்தமான பண்ணையில் வனத் துறையினா் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 7 ஆப்பிரிக்கன் சா்வல் பூனைகள், 2 லாா் கிப்பான் குரங்குகள், 2 டஃப்டட் கேப்புசின் குரங்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 7 சா்வல் பூனைகளில் 3 குட்டிகளும் அடங்கும். இந்த விலங்குகளை சட்டப்படி வாங்கியதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் கேசவநாதனிடம் இல்லை. இதையடுத்து 11 வன விலங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வனத் துறையினா் கொண்டு வந்து, அந்த இடத்திலேயே வைத்து பராமரித்து வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் அரியவகை வெளிநாட்டு வன விலங்குகள். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அவை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட மீட்பு மையத்துக்கு மாற்றப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு தெரிவித்தாா்.

இதனிடையே வனத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்த கேசவநாதன் தலைமறைவாகியுள்ளதால், அவரைத் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.