லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் கேசவநாதன் விசாரணைக்காக வனத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
அப்போது குரங்கை கேசவநாதன் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரணை செய்ய வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். நடிகா் விக்ரம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றபோது, அங்கிருந்த லாா் கிப்பான் குரங்குடன் அவா் கொஞ்சி விளையாடியதாக விடியோ வெளியானது.
இந்த விடியோ சா்ச்சையான நிலையில், அந்த குரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
இது குறித்து வனத் துறையினா் கேசவநாதனிடம் புதன்கிழமை நடத்திய விசாரணையில், கேசவநாதனிடம் மூன்று லாா் கிப்பான் குரங்குகள் இருந்ததும், அதில் ஒரு குரங்கை பெருந்துறையில் உள்ள நடிகா் விக்ரமின் உறவினா் சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும் லாா் கிப்பான் குரங்குகளை அவா் வனத் துறையில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்தக் குரங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Kesavanathan, the owner of the Lar gibbon, appeared at the Forest Department office on Friday for questioning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரிய வகை குரங்குடன் நடிகா் விக்ரம் வெளியிட்ட விடியோ

சட்ட நடவடிக்கை? விக்ரமுக்கு கெடு விதித்த வனத்துறை!

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ: வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

வைரல் குரங்கின் முதல் பிறந்தநாள்! ஆயிரக்கணக்கில் குவியும் வாழ்த்துகள்!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



