தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வைரல் குரங்கின் முதல் பிறந்தநாள்! ஆயிரக்கணக்கில் குவியும் வாழ்த்துகள்!

உலகம் முழுவதும் வைரலான பஞ்ச் குரங்கின் முதல் பிறந்தநாளுக்கு ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

News image

பஞ்ச் குரங்கு

Updated On :27 ஜூலை 2026, 3:21 pm IST

உலகம் முழுவதும் வைரலான பஞ்ச் குரங்கின் முதல் பிறந்தநாளுக்கு ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் ஜூலை 26, 2026 அன்று பிறந்த பஞ்ச் என்கிற குரங்கை, அதன் தாய் குரங்கு பராமரிக்காமல் தனிமையில் விட்டுவிட்டது.

தாயின் அரவணைப்பின்றி அந்தக் குட்டிக் குரங்கு தனிமையில் வாடியது. இதனைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகத்தினர் பஞ்ச் குரங்கிற்கு ஆறுதலாக ஒரு ஆரஞ்ச் நிற ‘ஒராங்குட்டான்’ பொம்மையை வழங்கினர்.

அந்தப் பொம்மையை எப்போதும் கட்டிப்பிடித்துக் கொண்டு திரிந்த பஞ்ச், அதனைத் தனது தாயாக நினைத்து எங்கு சென்றாலும் தன்னுடன் இழுத்துக்கொண்டுச் சென்றது.

அனாதையாக இருந்த குரங்கு, பொம்மையுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது அனைவரது இதயத்தையும் கவர்ந்தது. பஞ்ச் குரங்கின் சேட்டை தொடர்பான காணொலிகள் உலகம் முழுவதும் வைரலானது.

கடந்த பிப்ரவரி மாதம், பஞ்ச் தனது குரங்குக் கூட்டத்துடன் சேர்வதற்கான முயற்சிகளில் தடுமாறுவது குறித்த காணொலிகளை பதிவுகளை இச்சிகாவா உயிரியல் பூங்கா நிர்வாகம் சமூக ஊடகங்களில் வெளியிடத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, #HangInTherePunch என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பஞ்ச்-க்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

பஞ்ச் குரங்கைக் காண்பதற்கு அந்தப் பூங்காவிற்கு பல நாடுகளிலிருந்தும் மக்கள் வரத்தொடங்கினர்.

இந்த நிலையில், பஞ்ச் குரங்கு தனது முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடியது. அந்தக் குரங்கிற்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து அட்டைகளை அனுப்பியுள்ளனர்.

இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் கடந்த ஓராண்டில் பஞ்சின் பயணத்தை விவரிக்கும் காணொளிகலைக் கொண்ட ஒரு சிறப்பு காட்சியை இச்சிகாவா உயிரியல் பூங்கா அமைத்துள்ளது.

பஞ்ச் பற்றி பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில், “பஞ்ச் ஒராங்குட்டான் பொம்மையின் பக்கம் திரும்புவது படிப்படியாகக் குறைந்துள்ளது. அது மற்ற குட்டிக் குரங்குகளுடன் பேசி விளையாடப் பழகிவிட்டது. அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராகத் தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது” என்றனர்.

Summary

Viral monkey's first birthday! Wishes pouring in by the thousands!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.