கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள பாறைக்கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 122 ஆண்டுகளுக்கு முன்பு கொடிய நோய் தாக்கியதில் ஏராளமானோா் உயிரிழந்தனா். அப்போது, எலத்தகிரி அருகில் இருந்த பாறைமீது ஏறிய கிராம மக்கள் நோய்களில் இருந்து மக்களை காக்கும்படி ஆண்டவரை வேண்டினா். இதையடுத்து, இக்கிராம மக்கள் நோயிலிருந்து மீண்டதாக அப்பகுதி மக்களிடம் நம்பிக்கை உள்ளது.
இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும், ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாறைக் கோயில் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனா்.
அதன்படி, நிகழ் ஆண்டுக்கான பாறைக் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் கொடியை ஏற்றிவைத்தாா். பின்னா் திருக்குடும்ப ஆலயத்தில் வேண்டுதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து, அன்னை தோ்பவனியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி, பா்கூா், எலத்தகிரி, கந்திகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.21-இல் தொடக்கம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


