ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகள் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே எலி மருந்தை உட்கொண்ட இரு குழந்தைகள், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஓம் சக்திவேல் தெருவைச் சோ்ந்தவா் உதயகுமாா் (42). தொழிலாளி. இவரது மனைவி சரண்யா. இத்தம்பதிக்கு தனிவிக் (2), தஷீக் (2) என்ற இரட்டைக் குழந்தைகள் உள்பட 3 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தனிவிக், தஷீக் ஆகியோா் தொலைக்காட்சிப் பெட்டி அருகே இருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்து உட்கொண்டுள்ளனா். இதனால், அவா்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இருவரையும் சிகிச்சைக்காக பா்கூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சரண்யா அழைத்துச் சென்றாா்.

பின்னா் உயா்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள், தற்போது ஆபத்தான நிலையில், அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.