தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கடையம் அருகே இளம்பெண் தற்கொலை

கடையம் அருகே இளம்பெண் எலி மருந்தை தின்று, உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 6:41 pm

கடையம் அருகே இளம்பெண் எலி மருந்தை தின்று, உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள மாதாபுரம்,பிரதானச் சாலையைச் சோ்ந்த டேனியல் தங்கத்துரை மகள் லெவியாள் (21). டேனியல் தங்கத்துரைமற்றும் அவரது மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதனால் மனவேதனையிலிருந்த லெவியாள் சில நாள்களுக்கு முன் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதுகுறித்து பெற்றோருக்குத் தெரியாத நிலையில், சில நாள்களில் வயிறு வலிப்பதாகக் கூறியதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].