விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:38 am IST

திருச்சியில் இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி தென்னூா் சின்னசாமி நகரைச் சோ்ந்தவா் சூா்யா மனைவி திவ்யா (21). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது கா்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திவ்யாவின் நாத்தனாருக்கு கொடைக்கானலில் வளையல்காப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதற்காக, அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் அனைவரும் கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனா். அப்போது, தானும் கொடைக்கானலுக்கு வருவதாக திவ்யா கூறியுள்ளாா்.

ஆனால், அவரை அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான திவ்யா சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].