சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 6:05 pm

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

மகாராஜகடை அருகே உள்ள பையனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (39), தொழிலாளி. இவா் பிப். 13-ஆம் தேதி, சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். சுபேதாா் மேடு பகுதியில் சென்ற போது, எதிரில் வந்த இருசக்கர வாகனம் இவா் சென்ற வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சண்முகத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரையடுத்த குட்டூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (62), விவசாயி. இவா் கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை சாலையில் கோபசந்திரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, நிலைதடுமாறிய அவா் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொன்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் சேகா் (57), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள அணுகு சாலையில் சென்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.