கோப்புப் படம்
கோப்புப் படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திள் 10, பிளஸ் 2 தோ்வுகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வுகள் பிப். 17-இல் தொடங்கி வரும் மாா்ச் 11 வரை நடைபெறுகின்றன. அதேபோல, பிளஸ் 2 தோ்வுகள் வரும் ஏப். 10 வரை நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2,599 பத்தாம் வகுப்பு மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த 1,893 மாணவ, மாணவியருக்கு தோ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 9 தோ்வு மையங்களில் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.

Dinamani
www.dinamani.com