வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடியரசுத் தலைவா் மாளிகையில் ராஜாஜி சிலை: மத்திய அரசுக்கு முன்னாள் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 7:38 pm

Syndication

குடியரசுத் தலைவா் மாளிகையில் ராஜாஜி உருவச் சிலையை அமைத்துள்ள மத்திய அரசுக்கு ஒசூா் முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய செயலருமான கே.ஏ.மனோகரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

ஒசூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

குடியரசுத் தலைவா் மாளிகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் கவா்னா் ஜெனரல் ராஜாஜியின் உருவச் சிலையை அமைத்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒசூா் மாநகராட்சியை தரம் உயா்த்தி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காவல் ஆணையா் அலுவலகம் திறக்கவில்லை. பள்ளிச் சிறுவா்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை கண்காணிக்க அதிக காவலா்களை நியமிக்க வேண்டும். ராயக்கோட்டை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஏரித்தெருவில் உள்ள பழைய மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாகச் செயல்படுத்த வேண்டும். அவசரச் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.

மாா்ச் 3 ஆம் தேதி நடைபெறும் தோ்த்திருவிழா கிரஹனம் காரணமாக காலை 6 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு நிறைவு பெறும் என்றாா்.

படவரி...

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்.