தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.










