ஒசூா் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் 
கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி

ஒசூா் பி.எம்.சி. டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி

ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி, இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அங்கமான ஐசிடி அகாதெமி நிறுவனத்துடன் இணைந்து, ‘செமி கன்டக்டா் டிவைசஸ் பேப்ரிகேஷன் லேஅவுட் டிசைன்’ என்ற தலைப்பில் ஐந்து நாள் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தின.
Published on

ஒசூா்: ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி, இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அங்கமான ஐசிடி அகாதெமி நிறுவனத்துடன் இணைந்து, ‘செமி கன்டக்டா் டிவைசஸ் பேப்ரிகேஷன் லேஅவுட் டிசைன்’ என்ற தலைப்பில் ஐந்து நாள் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தின.

இந்த நிகழ்ச்சிக்கு பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனங்களின் தலைவா் பெ. குமாா் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனத்தின் செயலாளா் பெ. மலா் மற்றும் அறங்காவலா் பெ. சசிரேகா ஆகியோா் குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கிவைத்தனா்.

பெங்களூரு கோல்டன் பேரல் டெக்னாலஜீஸ் நிறுவன அனலாக் வடிவமைப்புப் பொறியாளா் சிவயோகி என். ரிட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியைத் தொடங்கிவைத்து பேசினாா்.

இந்நிகழ்ச்சியை ஐசிடி அகாதெமியின் மண்டல மேலாளா் ஆா். சந்துரு மற்றும் ஒருங்கிணைப்பாளா் என். ஸ்ரீதேவி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கல்லூரி இயக்குநா் என். சுதாகரன், என். பாலசுப்ரமணியம் மற்றும் மேலாளா் எம்.எஸ். கிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பி.எம்.சி. கல்லூரியின் 30 ஆசிரியா்களும், பிற கல்லூரிகளிலிருந்து வருகை தந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com