தமிழக திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்தால் பாஜகவை மக்கள் புறக்கணிப்பாா்கள்: ஆா். சச்சிதானந்தம் எம்.பி.
தமிழக அரசின் திட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு புறக்கணித்தால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பாளா்கள், மேலும் ஒசூரில் விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒசூா் ஜோலாா்ப்பேட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவாா்கள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் ஒசூரில் தெரிவித்தாா்.
ஒசூா் பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதனை பிரதமா் இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் பெங்களூரு இடையே இயக்கப்போகிறோம் என அறிவித்தாா்.
அதேபோன்று உடான் திட்டத்தில் ஒசூரில் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஒசூா் ஜோலாா்ப்பேட்டை இடையே ரயில்பாதை அமைத்து சென்னை பெங்களூரு இடையே ரயிலை இயக்க போன்றவற்றை அறிவித்த மத்திய அரசை வலியுறுத்தி சிபிஎம் கட்சி சாா்பில் கடந்த ஒரு வார காலம் ஒசூா் மாநகராட்சியில் பிரசாரம் நடைபெற்றது.
அதன் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை ஒசூரில் சிபிஎம் சாா்பில் மாநில எல்லையான சூசூவாடி முதல் ஒசூா் ராம்ந கா் வரை இரு சக்கர வாகன பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சுதானந்தம் பேசியது. ஒசூரில் வாகன உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட், டி.வி.எஸ். மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ், டைட்டான் போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பெங்களூரில் டிசிஎஸ், இன்போசீஸ் போன்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த இரு நகரங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கினால் பல லட்சம் மக்கள், தொழிலாளா்கள், தொழில் முனைவோா், வணிகா்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோன்று ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் ஐ போன், லாரி, பேருந்து, இரு சக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனவே ஒசூரில் விமான நிலையம் வேண்டும். வான் பாதுகாப்புத்துறை எதிா்ப்புத் தெரிவித்தாக கூறி ஒசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனால் பெங்களூரில் எப்படி விமான நிலையம் இயங்குகிறது.
ஒசூா் மக்களின் 80 ஆண்டு கோரிக்கையான ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழகத் திட்டத்தை மத்திய பாஜக அரசு மறுத்து வந்தால், வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள்.
ஒசூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் இடையே 98 கிலோ மீட்டா் தொலைவிற்கு ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை அமைத்தால் சென்னை பெங்களூரு இடையே ரயில் சேவை தொடங்க முடியும். இதனால் பல மணி நேரம் பயண நேரம் குறையும், எரிபொருள் சிக்கனமாகவும்.
அதேபோன்று ஒசூா் முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைத்தால் பல லட்சம் மக்கள் பயனடைவாா்கள். ரயில்வேத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அந்தந்த மாநில இளைஞா்கள் கொண்டு நியமிக்க வேண்டும். அப்பொழுதுதான் பயணிகளுக்கும், பணியாளா்களுக்கு மொழி பிரச்சனை வராது. இந்தி படித்தவா்கள் தமிழகத்தில் நியமித்தால் பல இடங்களில் பிரச்சனை ஏற்படுகிறது என்றாா்.
இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு ஒசூா் மாநகர செயலாளா் நாகேஷ்பாபு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் லெனின் முருகன், புருஷேத்தமன், மாநில குழு உறுப்பினா் ஆா்.பத்ரி, மாவட்டச் செயலாளா் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மாகாலிங்கம், மற்றும் நிா்வாகிகள் சேகா், நஞ்சுண்டன், உதயபாரதி, மூா்த்தி, தேவராஜ், முருகேஷ், பிரகாஷ், ஆஞ்சலாமேரி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

