திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 62 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :2 ஜூலை 2026, 6:53 am IST

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 62 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திட்டமிட்டிருந்தனா். இதற்கு, காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இந்த நிலையில், அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமையில், மாவட்டச் செயலாளா் பெரியசாமி, பொருளாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து கைது செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயா் மாற்றம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.